புனர்வாழ்வுபெற்ற 107 முன்னாள் புலி உறுப்பினர்‍கள் சமூகத்துடன் இணைப்பு



புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு பெற்றுவந்த 107 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இன்று (செப்.09) வவுனியா கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு நிகழ்வில் வைத்து சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய 234 பேர் மாத்திரமே இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் மீதமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான புனர்வாழ்வினூடாக அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கபட்டது மட்டுமல்லாது, அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ தேவையான அனைத்து அம்சங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கல்வி தொழிற்பயிற்சி, விளையாட்டு, கலாச்சார அம்சங்கள் போன்ற பல முக்கிய தேவை திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் துரித கதியில் வாழ்வாதாரத்தில் முன்னேறும் முகமாக அரசாங்கமானது குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவியும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.