தமிழ்சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
டைரக்டர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’555′ படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார் பரத். அப்போதே எனக்கு வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று மீடியாக்களிடன் தெரிவித்திருந்தார்.
அதன்படி பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின் மகளும் பல் மருத்துவருமான டாக்டர் ஜெஸ்லிக்கும் திருமணம் 09.09.2013 ஆம் தேதியான நேற்று மிக எளிமையான முறையில் நடைபெற்றது .
இதயடுத்து அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர்-14 ஆம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்ற திரைப்படக் கலைஞர்கள் பத்திரிகை மற்றும் தொலைகாட்சி ஊடக நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களோடும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த தகவலை அவரது மேனேஜர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.