2020 ஆம் ஆண்டிற்குள் விசர் நாய்க்கடி நோயை ஒழிக்க நடவடிக்கை




எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் விசர் நாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன் இந் நாய்களின் கடிக்கு இலக்காகி வருவோரின் தொகையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையிலேயே சுகாதார அமைச்சு அந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்து.

இதன்படி சுகாதார அமைச்சு உள்ளூராட்சி அமைச்சு, கால்நடை வள அமைச்சு, உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டடுள்ளது.
குப்பைகள், கழிவுப் பொருட்கள் பெருமளவில் குவிந்து காணப்படும் இடங்களிலேயே இவ்வாறான நாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

விசர் நாய்க்கடி மூலம் கடந்த வருடம் 38 பேரும் இவ்வருடத்தில் இதுவரை 17 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.