சிரஞ்சீவி மகன் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு: ஐகோர்ட்டு உத்தரவு



சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவின் படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்

தரவிட்டு உள்ளது. ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என சிரஞ்சீவி கருத்து வெளியிட்டதற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா, தம்பி பவன் கல்யாண் நடித்த படங்களை ஓட விடமாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். இது போல் ஆந்திராவிலும் தெலுங்கானா பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. ராயலசீமா பகுதியில் சிரஞ்சீவி குடும்பத்தினர் படங்களை ஓடவிட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். ராம்சரண் நடித்த தூபான் படக்குழுவினர் ஐகோர்ட்டில் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர். அதிக செலவிட்டு படத்தை எடுத்துள்ளோம். படம் ரிலீசாக விட்டால் நஷ்டம் ஏற்படும் எனவும் தூபான் படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தர விடவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘தூபான்’ படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர். இதையடுத்து படம் நேற்று ரிலீசானது தியேட்டர்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். விசாகபட்டினம் போன்ற பகுதிகளில் தியேட்டர்கள் தாக்கப்படலாம் என பயந்து படம் திரையிடப்பட வில்லை.