அனுஷ்கா, பிரியாமணி ஆகியோர் சிறப்பு பயிற்சி பெற்று சண்டை காட்சிகளில் நடித்தனர்.
"தலைவா' படத்தில் தற்போது போலீஸ் வேடத்தில் நடித்த அமலாபால் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறார் காஜல் அகர்வால். "துப்பாக்கி' படத்துக்குப் பின் விஜய் ஜோடியாக "ஜில்லா' படத்தில் நடிக்கிறார் காஜல். இதில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம். சமீபத்தில் அவர் நடித்த விறு விறு சண்டை காட்சிகள் சென்னையில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. போலீஸ் சீருடையில் வில்லன்களுடன் மோதினார்.
முதன் முதலாக சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் பற்றி காஜல் கூறுகையில், ""ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அதற்காக காத்திருந்தேன். வாய்ப்புகள் சரி வர அமையவில்லை. "ஜில்லா' படத்தில் கேட்ட போது, எனக்கு போலீஸ் வேடம் பொருந்துமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்காக போலீஸ் உடை அணிந்து டெஸ்ட் ஷூட் எடுத்த பின் போலீஸ் வேடம் எனக்கு பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறினர். அதன் பின்னரே இந்த வேடத்தில் நடித்திருக்கிறேன்'' என்கிறார் காஜல்.