காதல் தோல்வி நடிகைகளின் அட்வைஸ் கேட்டு கடுப்பாகிய ஹன்சிகா!!

விரல்வித்தை நடிகரை அந்த பப்ளிமாஸ் காதலித்து வருவது தெரிந்ததே. ஆனால் நடிகர் திருமணம் அடுத்த ஆண்டு என்று சொல்ல, நடிகையோ இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகே திருமணம் என்று எதிரும் புதிருமான கருத்தினை இருவருமே வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே நடிகையின் சமீபத்திய பிறந்த நாளுக்கு அவரது மும்பை இல்லத்துக்கு நேரிலேயே சென்று பரிசு பொருட்களை குவித்து ஆச்சர்யப்படுத்தி விட்டு வந்தார் நடிகர். ஆனால், இந்த நேரத்தில் நடிகையின் காதல் விவகாரம் பற்றி கேள்விப்பட்ட, சில காதல் தோல்வி நடிகைகள் பப்ளிமாஸ் நடிகைக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கியிருக்கிறார்களாம். அவரை தனியாக உட்கார வைத்து, இந்த நடிகர்களே இப்படித்தான், எதையாவது எதிர்பார்த்து காதல் கீதல் என்று வட்டம் போடுவார்கள் என்று தங்களது அனுபவங்களை ஓதி வருகிறார்களாம்.

ஆனால், அவர்கள் சொல்வதை கண்ணிமைக்காமல் கேட்கும் பப்ளிமாஸ், நீங்க சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிட்டீங்களா? இப்ப நான் சொல்றேன் கேட்டுக்கோங்க, என் காதலர் மீது எனக்கு நூற்றுக்கு நூற்றி ஐம்பது சதவீதம் நம்பிக்கை உள்ளது. அவரைப்போன்று ஒரு டீசன்டான மனிதரை பார்க்கவே முடியாது என்று காதல் வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை விடும் நடிகை, அங்கிருந்து ஆவேசமாக வெளியேறிவிடுகிறாராம்.

இதனால் இவர்களுக்கெல்லாம் சொன்னா புரியாது, பட்டால்தான் புத்தி வரும் என்று அந்த காதல் தோல்வி நடிகைகள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்