வாஸ் மீது இன்னொரு கேஸ்!

வாஸ் மீது இன்னொரு கேஸ்!
மாலபே தொழிநுட்ப கல்லூரி மாணவன் நிப்புன ராமநாயக்கவை கடத்திச் சென்று சித்திரவதை செய்த சம்பவத்தில் பணி நீக்கம்
செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மீது வழக்குத் தொடரக் கூறி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிப்புன ராமநாயக்கவின் தாயாரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் மாலினி குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இம்மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனு குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை தீர்மானிக்க, சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஏ.நவாம் கால அவகாசம் கோரினார்.

அதன்படி குறித்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.