தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் தொழில்நுட்ப போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது அவருக்கும் மசினகுடி பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சப்–இன்ஸ்பெக்டர் சக்திவேல் பணியிட மாற்றம் பெற்று தனது சொந்த ஊருக்கு சென்றார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
மாறுதலாகிச்சென்ற பின்னர் நிஷா–சக்திவேல் இடையே கடந்த ஓராண்டாக எந்த தகவல் பரிமாற்றமும் இல்லை. சப்–இன்ஸ்பெக்டருடன் தொடர்பு இல்லாத நிலையிலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பது நிஷாவுக்கு தெரியவந்தது.
கொதித்தெழுந்த அவர் கோவை ஐ.ஜி. டேவிட்சன் ஆசீர்வாதத்தை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் சப்–இன்ஸ்பெக்டர் சக்திவேல் தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி விட்டார். மேலும் என்னிடமிருந்து ஏராளமான பணமும் பெற்றுக்கொண்டார்.
தற்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிகிறது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.
நிஷாவின் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு ஐ.ஜி. டேவிட்சன் ஆசீர்வாதம் உத்தரவிட்டார். அதன்பேரில் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு அனிதா ஆகியோர் நிஷாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நிஷா அளித்த புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சக்திவேல் மீது ஆசைகாட்டி ஏமாற்றுதல், வரதட்சணை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஊட்டி நகர மேற்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.