போதைப், பொருள் பொட்டலங்களுடன் மூன்று வயது சிறுமி பள்ளிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் ஹார்லம் பகுதியில் படிக்கும் மூன்று வயது சிறுமி ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று ள்ளார். அப்போது அவரது பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனப்படும் போதைப் பொருள் இருந்த்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பள்ளி நிர்வாகம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்து போதைப் பொருளை பறிமுதல் செய்து சிறுமியை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமியின் தந்தையின் நண்பர் மெனா(வயது 24) என்பவர் தான் போதைப் பொருளை சிறுமியின் பள்ளிப் பையினுள் வைத்தது விசாரணையில் தெரிய வந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் மெனாவை கைது செய்தனர்.