Surya Clash With Ajith !

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிக்கும் படம் ‘மங்காத்தா’. இப்படம் அஜித்குமாரின் 50 வது படம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். தற்போது கிடைத்திருக்கும் தகவல் படி அஜித்குமாருடன் சூர்யா மோத இருக்கிறாராம். இதனால் இருதரப்பு ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் ‘7ஆம் அறிவு’. இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். கஜினியில் இணைந்த சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியே, மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறது.

இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து விட்டனவாம். போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளில் இரண்டு திரைப்படக்குழுவினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எல்லா வேலைகளும் முடிந்த பிறகு ஜூலை மாதத்தில் ‘மங்காத்தா’ வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் தெரிவிதுள்ளார். அதே போல ‘7ஆம் அறிவு’ படமும் ஜூலையில் வெளியாகும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் ஜூலையில் ஒரே தேதியில் வெளியாக இருக்கிறதாம். இதனால் அஜித் படத்துடன் சூர்யாவின் படம் நேரடியாக மோதும் என்றும், இந்த மோதல் அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தரும் என்றும் தெரிகிறது.