அடுத்தமாதம் (ஜுன் 22 -ஆம் தேதி) விஜய் 40 வயதில் அடி எடுத்து வைக்கிறார் விஜய். இந்த பிறந்தநாளுக்கு தனது ரசிகர்களுக்கு வேலாயுதம் படத்தை பரிசாகத் தந்துவிட வேண்டும்விட என்று வேக வேகமாக நடித்துக்கொடுத்தார் விஜய்.
ஆனால் ஒரு பாடல் காட்சியும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும், நண்பன் படப்பிடிப்புக்கு கொடுத்த கால்ஷீட்டால் தள்ளிபோய்விட்டதால், திட்டமிட்டபடி ஜூன் இறுதியில் வேலாயுதத்தை வெளியிட முடியாத நிலை.
வேலாயுதம் பிறந்த நாள் பரிசாக கொடுக்க முடியாத நிலையில் இன்னோரு அசத்தல் பரிசை கொடுக்கப்போகிறார் என்று அணல் கக்கும் தகவல்
கிடைக்கிறது விஜய் வட்டாரத்தில் இருந்து. மணிரத்தணம், ஷங்கர் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது விஜயின் நீண்ட கால விருப்பம். இப்போது ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பது சாத்தியமாகி விட்டது. அடுத்து பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்புக்கொண்டு , கால்ஷீட்டும் ஒதுக்கி
ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டாராம் விஜய்.
தற்போது அந்தபடத்தை தயாரிப்பதில் நிதி, துணை நடிகர்கள் கிடைக்காமை, மார்கெட்டிங் பிரச்சனை உட்பட பல காரணங்களை சுட்டிக்காட்டி படத்தை
டிராஃப் செய்திருகிறார் மணி. ஆனால் விஜய் கொடுத்த அதே கால்ஷீட்டில் ஆக்*ஷன் காதல் கதையில் நடிக்க விருப்பமா என்று கேட்டாராம் மணி. இதற்கு விஜய் சம்மதித்து விட்டார் என்கிறார்கள் உறுதியாக.
இந்தப்படம் 25 கோடியில் உருவாக இருக்கிறது என்ற தகவலும் கிடைக்கிறது. மேலும் விஜய் பிறந்தநாளில் இந்தப் படம் பற்றிய தகவல் அதிகார பூர்வமாக
வெளியாகும் என்கிறார்கள். விஜய் ஆதரவு அதிமுக ஜெயித்ததில் இருந்து விஜக்கு சூடு பிடிக்குது வெற்றிப்பட வரிசை. அப்போ பகலவன்?