ஜீவா ஜோடி நஸ்ரியா… ‘நீ நல்லா வருவடா’!
சென்னை: கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் நாயகியான நஸ்ரியா நசீம் அடுத்து ஜீவாவுடன் ஜோடி சேர்கிறார். படத்துக்குப் பெயர் நீ நல்லா வருவடா. தமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியா, அடுத்து தனுஷ் ஜோடியாக நய்யாண்டி, ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து கார்த்தி ஜோடியாக ஒரு படத்திலும், இந்தப் படத்தை ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் அடுத்த படமான நண்பேன்டாவில் நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடுத்து ஜீவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நஸ்ரியா. படத்துக்கு ‘நீ நல்லா வருவடா’ என தலைப்பு வைத்துள்ளனர். புதிய இயக்குநர் சந்திரமோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ஆர் பி சவுத்ரி தயாரிக்கிறார்.