வேதாரண்யம் அருகே 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்! இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? - தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

இலங்கையில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் வழியாக மோட்டார் சைக்கிளில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வேதாரண்யம் அருகே உள்ள திருக்குவளை வட்டம் தென்கரை ஈசனூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 18 கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது தமிழகத்தின் வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வேதாரண்யம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்து 2 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இராமேஸ்வரம் மீனவர்களிடம் இறால் கொள்ளை : இலங்கை கடற்படை அட்டூழியம் நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி இறால், நண்டு, மீன்களை கொள்ளையடித்து விரட்டினர். இராமேஸ்வரத்தில் இருந்து ஆக.31ல் நூறுக்கும் குறைவான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். உயிருக்கு பயந்து கரையை நோக்கி வந்த நான்கு படகுகளை மடக்கி பிடித்து இறால், நண்டு, மீன்களை பறித்து, வலை மற்றும் போட்பலகையை வெட்டி கடலில் மூழ்கடித்தனர். இதனால் நான்கு படகிற்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நஷ்டமும் கடற்படை விரட்டியதால் தொழில் நஷ்டத்தில் பெரும்பாலான படகுகள் கரைக்கு திரும்பின. இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஊடiஉம ர்நசந