மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளம் கிராமத்திலும் கிரிமிச்சைக் கிராமத்திலும் வீசிய சுழல்காற்றினால் 72 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைததுவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். இன்பராஜன் தெரிவித்தார்.
மதுரங்குளம் கிராமத்தில் வீசிய சுழல்காற்றினால் 49 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மதுரங்குளம் கிராம அலுவலகர் சீ.கஜேந்திரன் தெரிவித்தார்.
மதுரங்குளம் கிராமத்தில் 06 வீடுகள் முழுமையாகவும் 43 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கிரிமிச்சைக் கிராமத்தில் வீசிய சுழல்காற்றினால் 23 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மதுரங்குளம் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னலுடன் பனிக்கட்டி மழை பெய்ததுடன், பலத்த காற்று வீசியதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது வீட்டுக் கூரைகளுக்கு இடப்பட்டிருந்த தகரங்களும் ஓடுகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டதாகவும் அம்மக்கள் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவியளிப்பதற்கான நடவடிக்கையை கோறளை வடக்கு பிரதேச செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் மதுரங்குளம் கிராம அலுவலகர் தெரிவித்தார்.