தமிழ் கூட்டமைப்பின் மறுமுகம்




ஒவ்வொருவருக்கும் எவ்வித தலையீடுமின்றி தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் கருத்துக்களைப் பரிமாரிக்கொள்வதற்கும் சுதந்திரமுண்டு. எந்த ஒரு நாட்டிலும் மக்களின் கருத்துக்களை வெளியிடும் இந்த சதந்திரமானது ஒரு வரையரையைக் கொண்டுள்ளது. நாட்டு மக்களின் இன, மத, அரசியல் மரபுகளை பேனும் விடயத்தில் அரசு உறுதியாக இருக்கவேண்டும். சிறந்த ஜனநாயகத்தின் அடிப்படை இயல்பானது, நாட்டு மக்களின் எழுத்து, பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தலிலே அமைந்துள்ளது.

2009,மே மாதம் முடிவுக்கு வந்த 30 வருட யுத்தம் பற்றிய விமர்சனங்கள் சிலரிடையே சூடு பிடித்துள்ளது. மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற கொடூர பயங்கரவாத யுத்தமானது மக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. வேறு நாடுகளில் இடம் பெற்றதைப் போன்று, தீவிரவாதத்தை அழிப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பொது மக்கள் பாதிக்கப்டுவதை கருத்தில் கொள்ளாது எமது நாடு செயற்படவில்லை. மாறாக யுத்தகாலத்தில் கூட மக்களினதும் எதிர்க்கட்சியினதும் கருத்துக்களுக்கு அரசு மதிப்பளித்து வந்துள்ளதை மறந்துவிடலாகாது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்தை புறக்கணிக்கக்கூடிய துளியளவு விடயங்களைக்கூட விமர்சிக்கும் அளவுக்கு ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கியதன் மூலம் நாடானது, போராடி வென்ற சமாதானத்தின் பலா பலன்களை சகலரும் அனுபவிக்கக்கூடியதாக செயற்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

நாட்டில் சமாதானம் பிறந்து நான்கே வருடங்கள் ஆனபோதிலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் வளர்ச்சியானது அளப்பரியதாகும். குறிப்பாக முன்னால் புலிகள் இயக்க உருப்பினர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வானது சர்வதேசரீதியில் பாராட்டைப்பெற்றது. அவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்பும் வழங்கப்பட்டதுடன் குறைந்த வட்டியில் விசேட சுய தொழில் கடண்களும் வழங்கப்ட்டிருக்கிறது. மேலும் வடபகுதி இளைஞர்களை இராணுவத்தில் இணைத்ததுடன் அவர்களுக்கு வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ்பிரேமசந்திரன், செல்வம் அடைக்கள நாதன் அப்பாதுரை வினாயகமூர்த்தி, பொன் செல்வ ராசா, எம் ஏ சுமந்திரன், ரீ யோகேஸ்வரன் போன்றவர்கள் இந்தியாவுக்குச்சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து பேசினார்கள். அமெரிக்காவில் இடம்பெற்ற தமிழ் சங்க கூட்டத்தில் பீ அரியநேந்திரன் கலந்து கொண்டிருந்தார். அதேவேளை தமிழர் கூட்டமைப்பு உருப்பினர்கள், சீனா, தென் ஆபிரிக்கா, ஜேர்மனி, சுவிட்சலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்றிருந்தனர். அதேபோன்று இவர்கள் மலேசியாவில் இடம்பெற்ற உலக தமிழர் பாதுகாப்புக்கூட்டத்திலும் கலந்திருந்தனர். மாவை சேனாதிராஜா, எம் ஏ சுமந்திரன், எஸ் சிரிதரன், பீ அரியநேந்திரன், எஸ் யோகேஸ்வரன் போன்றவர்கள் இலங்கைக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டனர். இவ் அறிக்கைகள் சமாதானத்தை விரும்பும் எந்த ஒரு பிரஜைக்கும் அவமானமே. இவர்கள்தான் சமாதானத்தை எதிர்க்கும் கோமாளிகள்.

ஆர் சம்பந்தன், மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் அன்மையில், பிரித்தானியாவில் இடம்பெற்ற உலகத்தமிழர்கள் அமைப்பின் மூன்றாம் கூட்டத் தொடருக்குச் சென்றிருந்தனர்.

கூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கையில் பேசித்தீர்க்க வேண்டிய சிறு சிறு தேசிய பிரச்சினைகளை வெளிநாடுகளில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பூதாகரமாக்கும் செயலில் ஈடுபட்டனர். இவர்களது நோக்கம் இவர்கள் தங்கியிருக்கும் நாடுகளை இலங்கையின் உள்விவகாரங்களில் ஈடுபடுத்தி ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுவதேயாகும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினர், மக்களின் உள்ளத்திலும் உடலிலும் இரத்தக் கறையைப்படிய வைத்த புலிகளின் கொடியை, வெட்கமில்லாமல் ஏந்தித் திரிகின்றனர். மேலும் வடபகுதி மக்களுக்கு அரசு கொண்டு வந்த தீர்வுகளையும் முயற்சிகளையும் குறை கூறி புலம்பியவாறு வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இவ்வாரான தமிழ் அரசியல்வாதிகள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளையும் அட்டூழியங்களையும் பற்றி ஒரு வார்த்தையேனும் வாய் திறந்து கூறுவதில்லை அரசுக்கெதிராக குரல் எழுப்பும் இவர்கள் வடபகுதி தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகள் என தம்பட்டம் அடித்தாலும் உலகப் புகழ்பெற்ற கல்வியாலாளர்களான லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோரை கொடூரமாகக் கொலைசெய்த தீவிரவாதிகளின் செயலை நொடிப்பொழுதில் மறந்துவிட்டனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று, தனிப்பட்ட பாதுகாப்பு, அபிவிருத்தித் திட்டங்களுக்கான வருடாந்த நிதி, தனிப்பட்ட வேறு வசதிகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்றவற்றை முழுமையாக அனுபவிக்கின்றார்கள். எனினும் அரசுக்கெதிராக செயற்படுகிறார்கள். தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க நாடு தனித்து நின்று போராடிய போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டுக்கு இடையூறாக செயற்பட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் சமூகத்துக்காக தங்களால் என்ன உதவிகள் செய்யப்பட்டன? அல்லது தமிழர்களுக்காக அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்காக என்னசெய்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு இன்று பதிலளிக்கமுடியாத நிலையிலுள்ளனர்.


புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட இக் காலகட்டத்தில் கூட அவர்கள் தமது இருப்பில் மட்டுமே கவணம் செலுத்திவருகின்றமை பெரும் கவலைக் குறிய விடயமாகும். தமது சமூகம் முகம் கொடுக்கக் கூடிய பிரச்சனைகளை முன்வைத்து அதற்கு தீர்வு காணும் வழிகளை விட்டுவிட்டு போலியாக அரசை குறைகூறித்திரியும் இவர்களது இச் செயலானது எமது சுதந்திரத்தைக் கூட நீடிக்கச் செய்யாது என்பதில் சந்தேகம் இல்லை


இதுவரை காலமும் தமிழ் சமூகத்திற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பால் எதுவித ஆக்கபூர்வமான பணிகளும் செய்யப்படவில்லை, ஆனால் அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகளை குறை கூறுவதிலும் விமர்சிப்பதிலுமே அவர்கள் காலத்தைக்கழிக்கின்றனர். தமது இயலாமையை மறைப்பதற்காக இவ்விதம் குறைகூறிக் கொண்டும் நீலிக்கண்னீர் வடித்துக் கொண்டும் தமது இருப்பை தக்கவைப்பதில் மட்டுமே கவணம் செலுத்தியுள்ளனர்.