சிரியா மீது தாக்குதல்: அமெரிக்கா- பிரான்ஸ் ஜனாதிபதிகள் கலந்து ஆலோசித்தனர்

சிரியாவில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக நடந்து வரும் போரில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 21ம் திகதி இராணுவத்தினர் நடத்திய இரசாயன தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே தாக்குதல் நடத்த இங்கிலாந்து வராவிட்டாலும், பிரான்ஸ் ஒத்துழைப்பு அளிக்கும் என ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஒபாமா, காங்கிரஸ் சபையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது