இங்கிலாந்தில் சிறுமி ஒருவரை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்தின் லிசெஸ்டர் பகுதியில் இந்தியாவை சேர்ந்த பாரத் மோத்வாடியா மற்றும் சந்திரேஷ் மிஸ்ட்ரி வசித்து வந்தனர்.
இவர்கள் 16 வயது சிறுமியை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
அதாவது, பேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, பின்னர் சிறுமியை காரில் அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாரத் மற்றும் சந்திரேஷ் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாரத்துக்கு 16 மாதமும், சந்திரஷேசுக்கு 8 மாதமும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.