டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில், நால்வர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான தீர்ப்பு நாளைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்த போது, வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட 23 வயதான மருத்துவ கல்லூரி மாணவி இரண்டு வாரங்களின் பின்னர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து வன்முறைகள் மற்றும் ஆர்பாட்டங்கள் இந்தியா முழுவதும் ஏற்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவன் ஒருவன் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன், குற்றவாளியாக காணப்பட்ட சிறுவன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறைச்சாலையில் உயிரிழந்த நிலையில், இன்று குற்றவாளிகளாக காணப்பட்ட ஏனைய நால்வருக்கு எதிரான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.