பார்த்தோம், பழகினோம், காதலித்தோ என்றார் பரத்.

பார்த்தோம், பழகினோம், காதலித்தோம் : புது மாப்பிள்ளை பரத்தின் ‘ஜிலீர்’ காதல் அனுபவங்கள்
காதலித்த பெண்ணையே திருமணம் செய்துவிட்ட உற்சாகத்தில் இருக்கிறார் ‘புதுமாப்பிள்ளை’ நடிகர் பரத்.

கலப்பு திருமணம் என்பதால் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான முறையில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து விட்ட அவர் நாளை மறுநாள் 14-ஆம் தேதி திருமண வரவேற்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

அந்த பிஸியிலும் தனது காதல் அனுவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இதோ ‘ஜில்லிட’ வைக்கும் புதுமாப்பிள்ளை பரத்தின் காதல் அனுபவங்கள் :

அவங்க பேரு ஜெஸ்லி. நானும் அவங்களும் 1 வருஷமாக லவ் பண்ணினோம். லவ் பண்ணும் போதே ரெண்டு வீட்டோட சம்மத்தோட தான் மேரேஜ் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணினோம், அதன்படி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது.

10 வருஷம் கேப்புக்கப்புறம் மறுபடியும் ஒரு மலையாளப் படத்துல நடிக்கிறேன். இந்தப்படத்துல 7 ஹீரோயின்கள் நடிக்கிறாங்க… அதுபோக ஒரு ஹிந்திப்படம், அப்புறம் திருமுருகன் சாரோட டைரக்‌ஷன்ல ஒருபடம்னு அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகியிருக்கு. இது பொண்ணு வந்த நேரம்னு கூட எடுத்துக்கலாம். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நான் ஹிந்து, அவங்க கிறிஸ்டீன். எங்க காதலுக்கு மதம் ஒரு தடையாத் தெரியல. அவங்களும் கோவிலுக்கு வருவாங்க.., நானும் சர்ச்சுக்கு போவேன்.



என்னோட ப்ரெண்ட் வீட்ல தான் ஜெஸ்லியை மீட் பண்ணினேன். அப்போ அவங்க காலேஜ்ல செகண்ட் இயரோ..? தேர்ட் இயரோ..? படிச்சிக்கிட்டிருந்தாங்க… அப்போதான் வழக்கம் போல மொபைல் நம்பர் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கிட்டோம், அதுக்கப்புறம் எஸ்.எம்.எஸ், அதுக்கப்புறம் போன்ல பேசினோம், ஒருநாள் நேர்ல மீட் பண்ணிக்கிட்டோம்.

கிட்டத்தட்ட ஒரு ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் மாதிரி தான் எங்க லவ்வும் இருந்துச்சு.

அவங்க இதுவரைக்கும் ஃலைப்ல சினிமா பார்த்ததே கெடையாது. அந்தப் படத்துலேயும் ஹீரோயின் த்ரிஷா அப்படித்தான். அதேமாதிரி அந்தப் படத்துல த்ரிஷா பேரு ஜெஸ்ஸி. இவங்க பேரு ஜெஸ்லி. அதேமாதிரி சிம்பு அந்தப் படத்துல அசிஸ்டெண்ட் டைரக்டர். நான் சினிமாவுல ஹீரோ. நாங்க முதன்முதல்ல மீட் பண்ணினப்போ நான் இதுவரைக்கும் நீங்க நடிச்ச படத்தை பார்த்ததே இல்லேன்னு ஜெஸ்லி என்கிட்ட சொன்னாங்க. ஸோ அப்படித்தான் எங்க காதல் வளர்ந்துச்சு.

என்னோட சினிமா புரொபஷனலை புரிஞ்சிக்கிட்ட ஒரு பொண்ணு தான் எனக்கு மனைவியா வரணும்னு நான் ஆசைப்பட்டேன். அதேமாதிரி ஒரு பொண்ணும் தான் எனக்கு அமைஞ்சிருக்காங்க. இப்படித்தான் எங்க காதல் வளர்ந்துச்சு.

என்றார் பரத்.