கொழும்பு, புதுக்கடை மாவட்ட நீதிமன்ற நீதவானின் மகன் கடத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டவர்களால் வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் வகுப்பிற்கு செல்ல தயாராகவிருந்த மாணவனை மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து வேனில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் சிறுவனை வாத்துவ பிரதேசத்தில் விட்டுச் சென்று ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். 15 வயதான சிறுவனுக்கு கடத்தல்காரர்களினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படு வதாகவும் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டார்.