திருமதியானால் ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க கூடாதா? கேட்கிறார் கரீனாtamil Latest Tamil Cinema news

திருமணம் ஆகிவிட்டால் ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க கூடாதா என கேட்டார் கரீனா கபூர். சமீபத்தில் திரைக்கு வந்த படம் சத்தியகிரஹா. இதில் அஜய் தேவ்கன் ஜோடியாக கரீனா கபூர் நடித்தார். படத்தில் அஜய் தேவ்கனுடன் நெருக்கமான காட்சிகளுக்கும் முத்தக் காட்சிக்கும் கரீனா மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. திருமணம் ஆகிவிட்டதால் அவர் இதுபோல் நடிக்கவில்லை எனவும் பேசப்பட்டது.

இது குறித்து கரீனா கூறியது: சினிமா என்பது வேறு. வாழ்க்கை வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. நடிப்பு எனது குடும்பத்தாரின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது. ஆயிரம் விளக்கம் சொன்னாலும் நடிப்பு, நடிப்புதான். அதனால் திருமணத்துக்கு முன்பு எப்படி நடித்தேனோ, திருமணத்துக்கு பிறகும் அப்படித்தான் நடிக்கிறேன். அப்படித்தான் நடிப்பேன். சத்தியகிரஹா படத்தில் காதல் காட்சிகளில் நடிக்க மறுத்ததாக மீடியாதான் கிளப்பிவிட்டது. அது உண்மை கிடையாது. அந்த படத்தில் முத்தக் காட்சி தேவைப்படவில்லை. அதனால் அதுபோன்ற காட்சி எதுவும் இல்லை. படத்துக்கு தேவைப்பட்டால் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன். திருமணம் ஆகிவிட்டதால் அதுபோல் நடிக்க மறுப்பதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சத்தியகிரஹா படத்தை எனது கணவர் சைப் அலிகான் பார்க்கவில்லை. அவர் அதிகம் படங்கள் பார்க்க மாட்டார். இப்போதைக்கு நான் முக்கியத்துவம் தருவது குடும்பத்துக்குதான். சினிமா இரண்டாம்பட்சம்தான். இவ்வாறு கரீனா கூறினார்.