தமிழ் சீ.என்.என் எனும் இணையத்தின் உரிமையாளரான கண்ணன் அல்லது செல்வா என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் கலந்து கொண்டமை இலங்கை புலனாய்வுத்துறையினரை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகைகள் தெரிவிக்கின்ற அதேநேரம், இலங்கை அரசுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ முடியாது என்ற செய்தியை சொல்லிக்கொண்டிருக்கின்ற தமிழ் சீ.என்.என் இணையத்தின் உரிமையாளரான முன்னாள் புலி உறுப்பினரின் மேற்படி ஊடுருவல் பாரிய பின்புலங்களை கொண்டதாக இருக்காலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சீ.என்.என் என்கின்ற குறித்த இணையத்தளம் தொடர்பாக பல்வேறு பார்வைகள் மக்களுக்கு இருந்தாலும் இதன் தோற்றம் அதன் பெயரில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முதலில் மக்கள் உணர்தல் முக்கியமானதாகும்.
இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வன்னியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த புலி ஊடகங்கள் செயலிழந்த அதேநேரம், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் சொத்துக்கள் அதன் பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டது போல் புலம்பெயர் தேசத்து புலி ஊடகங்களும் அதன் பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டது. புலிகளின் தலைமை வன்னியில் ஒழிக்கப்பட்டதை அடுத்து புலம்பெயர் தேசத்து புலிகள் இருபெரும் பிரிவுகளாகவும் பல உப பிரிவுகளாகவும் பிரிந்தனர். புலம்பெயர் தேசத்து புலி ஊதுகுழல்கள் எதையும் பிளவுபட்ட புலிகளால் கைப்பற்றிக்கொள்ள முடியாமற்போனது. மோசமான நிலைமை வன்னியில் தலைமை இருந்திருந்தால் உறவினர்களை பிடித்து வைத்துக்கொண்டு ஊடகத்தை எழுதியே எடுத்திருக்கலாம் அல்லது அதன் கடவுச் சொல்லையாவது பெற்றிருக்கலாம்.
இந்த நிலையில் நெடியவன் பிரிவுக்கான பிரச்சாரம் என்ற போர்வையில் உளவு வேலைகளை செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஊடகமாகவே தமிழ் சீ.என்.என் பலராலும் உணரப்பட்டது. சீ.என்.என் என்கின்ற பிரபல ஊடகம் ஒன்றின் தமிழ் பிரிவு போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த இணையத்தின் இலச்சினையாக சீ.என்.என் இணையத்தின் இலச்சினையே பயன்படுத்தப்பட்டது. தமிழ் சீ.என்.என் ஸ்தாபகரும் உரிமையாளருமான உபன், செல்வா, கண்ணன் என்ற பெயர்களில் உலாவிக்கொண்டிருக்கின்ற நபருக்கு எதிராக சீ.என்.என் இணையம் வழக்குத்தாக்கல் செய்தது. தமிழ் சீ.என்.என் என்றால் சீ.என்.என் இன் தமிழ் பிரிவு என்ற அர்த்தம் கிடையாது தமிழ் கொமுனிடி நியுஸ் நெட்வோர்க் என்பதே அதன் அர்த்தம் என்று கண்ணனால் கதை சொல்லப்பட்டது. சீஎன்என் ஒரு பெரிய ஊடகமாக சிறியதோர் ஊடகத்தின் குரல்வளையை நசிக்கவிரும்பாது விடயத்தை ஏற்றுக்கொண்டு கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. லோகோ மாற்றப்படவேண்டும் என்பதுடன் சீ.என்.என் இற்கு ஒப்பான எந்த லோகோவும் பயன்படுத்தமுடியாது என்பதுவே அந்த நிபந்தனை.
இவ்வாறு சீ.என்.என் உடனான சிக்கலை தீர்த்துக்கொண்ட கண்ணன் இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்களில் சனல் 4 தொலைக்காட்சிக்கு போட்டியாக எதிர்வரும் நாட்களில் சனல் 4 இலங்கையின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தப்போகின்றது சனல் 4 வெளியிடப்போகும் ஆதாரங்கள் எங்களிடமும் உண்டு என சனல் 4 விற்கு முன்பே தமிழ்சீ.என்.என் இல் போட்டோக்களை பிரசுரித்து சுய இன்பம் கண்டு கொண்ட வரலாறு நினைவூட்டலுக்கு உரியது.
கண்ணன் இணையத்தளத்தினை ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே இலங்கையினுள் நுழைவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார். டக்ளஸ் , கருணா , கேபி போன்ற அரசுடன் மிக நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு தான் நாட்டினுள் வருவதற்கு உதவி செய்யுமாறு வேண்டியிருக்கின்றார். ஆனால் குறித்த நபரின் பின்னணி மற்றும் இவரால் நாட்டிற்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை உணர்ந்து கொண்ட டக்ளஸ் , கருணா , கேபி போன்றோர் விடயத்தை மிகவும் நுணுக்கமாக கையாள முற்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் தொடர்பான மிகுந்த அனுபவமுள்ள மேற்படி நபர்களால் நிராகரிக்கப்பட்ட கண்ணனை ரொஹான் குணரட்ண அழைத்து வந்திருக்கின்றார். ஐரோப்பாவில் பல்வேறு இணையங்கள் மற்றும் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஊடாக இலங்கைக்கு எதிராக மிக மோசமான பிரச்சராங்களை மேற்கொண்டிருந்த சேது எனப்படுகின்ற சேதுரூபனே கண்ணனை ரொஹான் குணரட்ணவிற்கு அறிமுகம் செய்து வைத்தாக அறியமுடிகின்றது. இங்கே ஒரு பயங்கரவாத செயற்பாட்டுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றதாக என்ற சந்தேகங்கள் பரவலாக எழும்புகின்ற நிலையில் கண்ணன் எவ்வித அனுதியும் இல்லாமால் பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் கலந்து கொண்டமை ரொஹான்-கண்ணன் கூட்டு மீதுள்ள சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்கின்றது.
உலகின் பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட அந்த கருத்தரங்கில் கண்ணன் நுழைந்ததன் நோக்கம் என்ன? இவர் தீய நோக்கம் ஒன்றுக்காகவே நுழைந்திருக்கின்றார் என்பது அவர் எவ்வித அழைப்பிதழும் , முன்னறிவித்தலும் இல்லாமால் நுழைந்திருக்கின்றார் என்பதன் ஊடாக நிதர்சனமாகின்றது.
இவ்விடயம் பத்திரிகைகளில் பூதாதரமாக வெடித்ததை அடுத்து இரண்டு நயவஞ்சகத்தனங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைகின்றது. ஒன்று இலங்கை இராணுவத்தின் பிரிவு ஒன்றை தொடர்பு கொண்ட ரொஹான் குணரட்ண இலங்கை இராணுவத்தினால் கண்ணனுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக பின் திகதி குறிப்பிட்ட (பக்டேட்டட்) அழைப்பிதழ் கொப்பி ஒன்றை தயார் செய்து அதனை திவயி ன பத்திரிகைக்கு அனுப்பி வைக்க முடியுமா என வேண்டியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரம் ஒன்றில் இருந்து அறியக்கிடைக்கின்றது. ரொஹான் குணரட்ண மேற்கண்ட முயற்சியை செய்திருக்கின்றார் என்பது உண்மையாயின் அவர் இலங்கை இராணுவத்தினை தனது அம்மாவின் பெட்டிக்கடை என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாரா என்ற கேள்வியை கேட்கத்தோன்றுகின்றது. இலங்கை இராணுவம் அதன் அதியுயர் கொள்கைக்காக உலகின் மிகப்பயங்கரமான பயங்கரவாத அமைப்பொன்றை அழித்து இன்று சிகரத்தில் நிற்கின்றது. ரொஹானின் சில்லறைத் தனங்களை இவ்வாறானதோர் இராணுவத்துடன் பயிற்சித்து பார்க்க முனைவது இவர் தனது பெயர்முன்னே போட்டுக்கொண்டிருக்கின்ற பயங்கரவாத நிபுணர் என்ற சொற்பதத்திற்கு உரியவரா என்றும் கேட்கத்தோன்றுகின்றது.
இரண்டாவது நயவஞ்சகத்தனம் யாதெனில் பத்திரிகையில் செய்தி வெளியாகிய சிறிது நேரத்தில் குளோபல் தமிழ் நியூஸ் எனும் இணையம் குறித்த செய்தியை மொழிபெயர்ப்பு பாணியில் வெளியிட்டது. திவய்ன இவ்வாறான செய்தி ஒன்றை பிரசுரித்திருக்கின்றது என்ற செய்தியை சொன்ன குளோபல் தமிழ் நியூஸ்; தியவினவில் வெளியாகி செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கண்ணன் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டது. குறித்த இணையத்திற்கு கண்ணன் என்ன சொல்லிலிருக்கின்றார் என்பதை அப்படி எவ்வித வசனங்களும் மாற்றம் செய்யாமல் வாசகர்களின் பார்வைக்கு விடுகின்றோம்.
மேலுள்ள படங்களை பார்த்த உங்களுக்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ள வட்ட மிட்ட விடயங்களைப் பார்கின்றபோது இலங்கையிலே இடம்பெறுகின்ற கொம்பியூட்டர் ஜில்மாட் போன்ற ஊடக ஜில்மாட்டுக்களை உங்களால் அவதானிக்க முடிந்திருக்கும்.
முதலாவது ஜில்மாட் சிங்கப்பத்திரிகையில் தமிழ் சீஎன்என் எனும் இணையத்தளத்தின் உரிமையாளரே குறித்த படத்திலுள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தமிழரின் தலையில் மிளகாய் அரைத்து சம்பல் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற றேடியோவுக்கு குருவாகி நிற்கின்றவர் லண்டனிலிருந்து சென்ற தமிழ் இணையத்தள உரிiயாளர் எனப் பெயரைக்குறிப்பிடாது மக்களை ஏமாற்ற முயற்சிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஜில்மாட் யாதெனில் இலங்கைக்கு கண்ணன் செல்லவில்லை என்றும் அவர் லண்டனிலே உள்ளதாகவும் தான் இலங்கைக்கு சென்றிருந்தால் அங்கு இராணுவ அதிகாரிகளால் பிடித்து கொல்லப்பட்டிருப்பேன் என குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், நாம் இங்கு எழுப்புகின்ற கேள்வி யாதெனில் திவயின பத்திரிகைக்கு பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தியுள்ள கண்ணன் திவய்ன செய்தியில் தவறான விடயங்கள் பல சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல்களை சுவிட்சர்லாந்திலுள்ள புளொட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்கு வழங்கி கொண்டிருக்கின்றார். நான் தான் பிரித்தானியாவில் பன்னெடுங்காலங்களாக புலிகளுக்கு எதிராக வேலை செய்து வருகின்றேன். நான் எவ்வாறு புலிகளுக்கு எதிராக வேலை செய்தவன் என்பதை ரொஹான் குணரட்ணவை கேட்டுப்பாருங்கள் எனச் சொல்லியிருக்கின்றார்.
ஆனால் திவய்னவை தொடர்பு கொண்ட கண்ணன் ஏன் குளோபல் தமிழ் நியூஸ் எனும் இணையத்தளத்தினை தொடர்பு கொண்டு நீங்கள் பிழையான செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளீர்கள். திவய்ன வில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியான செய்தி அந்த படத்தில் இருப்பது நான்தான். நான் அந்த மாநாட்டில் கலந்து கொண்டது உண்மைதான். இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் இவ்வாறுதான் உண்டு. பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட மாநாடு ஒன்றினுள் கூட எனக்கு நுழையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது என்று சொல்லியிருக்கலாம் அல்லது அவ்வாறு செய்தற்கு இன்னும் நேரம் உண்டு.
மேலும் சுவிட்சர்லாந்திலுள்ள புளொட் உறுப்பினர் பொய் சொல்கின்றார் என்றால் நீர் இலங்கையில் சந்தித்த அரச உயர் மட்ட அதிகாரி ஒருவரிடம் , நீர் புலிகள் அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளதுடன் சில காலங்கள் அந்த அமைப்பில் இருந்தவன் என்றும் பிரித்தானியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக செய்த போலிப் பிரச்சராங்களை நினைத்து மனம் வருந்துகின்றேன் என்றும் அப்பிரச்சராங்களை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள மாட்டேன் என்றும் தனது பிரச்சராரத்தால் ஏற்பட்ட காயத்தை ஆற்றவே நான் இங்கு வந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டது பொய்யா?
புலிகளின் தற்போதைய விநாயகம் குழுவைச் சேர்ந்த பாண்டியன் என்பவனிடம் வன்னியில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் மலேசியாவில் வைத்து நீர் கையளித்த பணத்தை கேட்டு பாண்டியனுக்கு சவால் விட்டது பொய்யா? இந்த பணத்தை கேட்டு பாண்டியனிடம் நீர் மேற்கொண்ட சம்பாசனையை களவாக பதிவு செய்து அவற்றை உடகங்களுக்கு அனுப்பி விநாயகம் குழுவுக்கு எதிரான பிராச்சாரங்களை மேற்கொண்டு நெடியவன் குழுவை நியாயப்படுத்தியது பொய்யா? பாண்டியனுடனான தொடர்பு என்ன? யாருடைய பணம்? எதற்காக வழங்கப்பட்ட பணம் என்பதெல்லாம் மக்கள் அறியவேண்டிய தேவை இல்லையா?
இவ்வாறு பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாத நிலையில் ரொஹான் குணரட்ண கண்ணனை பாதுகாப்பு பிரிவினரினுள் ஊடுருவுததற்கு மாத்திரம் துணை நிற்கவில்லை. இலங்கையின் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றார். பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூடல்கள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் உண்டு. அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியை பெறவேண்டும். ஆனால் இவ்வாறான அனுமதி எதுவும் பெறாமல் ரொஹான் தன்னிச்சையாக சப்ரகமுவ, ஒலுவில் மற்றும் பல பல்கலைக்கழகங்களுள் கண்ணனுடன் நுழைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இலங்கையின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறி ரொஹான் குணரட்ணவால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.