இப்படியா செய்வது? டைரக்டரை கடிந்து கொண்ட சூர்யா


'மாற்றான்' படப்பிடிப்புக்காக லண்டனுக்கு போயிருக்கிறார்கள் கே.வி.ஆனந்த் மற்றும் படப்பிடிப்பு குழுவினர். சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா. இதை போய் பெரிசு பண்ணுறாங்களே என்று படம் சம்பந்தப்பட்டவர்கள் புலம்புகிற மாதிரி ஒரு நியூஸ் கிளம்பியிருக்கிறது Suryaகோடம்பாக்கத்தில். வேறொன்றுமில்லை, சூர்யா-கே.வி.ஆனந்த் இருவருக்கும் இடையிலான துளியூண்டு பிணக்குதான் அது.
பொதுவாக ஒரு படத்தை துவங்கும்போதே படத்தின் ஹீரோ, ஹீரோயின் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர்களுக்கான தேதிகளை குறித்துக் கொடுத்துவிடுவார் டைரக்டர். அப்படி ஒதுக்கிய தேதிகளை பார்த்துதான் முகத்தில் கடுகு பொறித்தாராம் சூர்யா.
மாதத்திற்கு பத்து நாட்கள் மட்டும் சூர்யா கால்ஷீட் தேவைப்படுவது போல பிரேக் டவுன் போட்டிருந்தாராம் கே.வி.ஆனந்த். பிசியான ஹீரோக்கள் மாதத்திற்கு முப்பது நாட்கள் நடிக்க சொன்னாலும் நடித்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு போக வேண்டுமே என்ற வேகம் மனசையும் உடம்பையும் இயக்கிக் கொண்டேயிருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு ஹீரோவிடம் மாதம் பத்து நாட்கள் மட்டும் படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றால் என்னாகும்? நான் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் படத்தை முடிச்சுட்டு என்னை அனுப்பிவீங்க என்று நினைத்தால் இப்படி பண்றீங்களே என்றாராம் சூர்யா.
அப்புறம் என்ன? அடித்து திருத்தி மாதம் முழுக்க நடிக்கிற மாதிரி தேதிகளை திருத்திக் கொண்டிருக்கிறாராம் ஆனந்த்