தமிழ்சினிமாவின் முடிசூடா குணச்சித்திர நடிகரான பிரகாஷ்ராஜ் ஒரு முடி(விக்) பிரச்சனை காரணமாக மாற்றான் படத்திலிருந்தே நீக்கப்பட்டார்.
நான் நடிக்காததை என் முடியா வந்து நடிக்கப் போகிறது என்றாராம் அவர். என்
முகத்தை கொடூரமாக காட்டுகிற முயற்சிதான் இது என்றெல்லாம் பிற்பாடு இந்த சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக தகவல். போகட்டும். பிரச்சனை இந்த படத்தோடு முடிந்தால் பரவாயில்லை. வெவ்வேறு படங்களிலும் தொடர்வதுதான் ஏன் என்று புரியாமல் தடுமாறுகிறார்கள் அவரது வெல் விஷர்கள். அத்தனை பேரும் அதிர்கிற மாதிரி அப்படி என்னதான் செய்துவிட்டார் அவர்?
கேட்டால் நொந்தே போவீர்கள். தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் சீனு வட்லா என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். படப்பிடிப்பில் இருந்தவரை ஷாட்டுக்கு வரச்சொல்லி உதவி இயக்குனர் ஒருவர் அழைக்க, அவரை பாஸ்டர்ட் என்று திட்டினாராம் பிரகாஷ்ராஜ்.
அதிர்ச்சியடைந்த உதவி இயக்குனர் மெல்ல அவரது அருகில் போய் சார் இப்படியெல்லாம் திட்டாதீங்க என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ்ராஜ், பாஸ்டர்ட் பாஸ்டர்ட் என்று யூனிட்டுக்கே கேட்கிற மாதிரி எழுந்து நின்று திட்ட, பெரும் கோபமடைந்தாராம் உதவி இயக்குனர். அவரும் பதிலுக்கு அதே வார்த்தையால் திட்டி தீர்க்க, பெரும் களேபரமாகிவிட்டது.
இந்த சண்டையில் இயக்குனர் தலையிடாமல் வேடிக்கை பார்த்தாராம். இது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது பிரகாஷ்ராஜுக்கு. சட்டென்று படப்பிடிப்பிலிருந்து கிளம்பிவிட்டாராம். இப்போது வேறொரு நடிகரை அந்த கேரக்டரில் நடிக்க வைக்கப் போகிறார்கள்.