அழகே உன்னை ஆராதிக்கிறேன்... - நடிக்க வரும் பாடகி ஸ்ரேயா கோஷல்?

'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று சொல்வதில் தமிழ்சினிமாக்காரர்களுக்கு இணை அவர்களேதான். கொட்டிவாக்கத்தில் வசிக்கும் மயிலாக இருந்தாலும் சரி, கொரியாவில் பிறந்த குயிலாக இருந்தாலும் சரி, பார்க்க லட்சணமாக இருந்தால் நடிக்கிறீங்களா என்றொரு கொஸ்டீனை நீட்டி விடுவார்கள்.
அப்படி இவர்களால் அழைத்துவரப்பட்ட அநேக தேவதைகள் இன்று கோடம்பாக்கத்தில் Shreya goshalசம்பாதித்து உலகம் முழுக்க சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிக்கவே மாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்த அழகான பாடகி ஒருவரை எப்படியோ பேசி சம்மதிக்க வைத்திருக்கிறாராம் ஒரு இயக்குனர். அவர்? பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்.
பின்னணி பாடகிகளில் ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு மட்டுமல்ல, முகத்திற்கும் தனி அழகு உண்டு. மேடைக் கச்சேரிகளில் ஸ்ரேயா வந்தால் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது கூட்டம். அதற்கு குரல் மட்டும் காரணமல்ல என்பது அவருக்கும் தெரியும்.
இசையமைப்பாளர்கள் கூட ஸ்ரேயா கோஷல் சென்னை வந்தால் ஐந்து நட்சத்திர விடுதியில்தான் அறை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். சம்பளமும் மற்றவர்களை விட சற்று அதிகம்தான். இவரைதான் தமிழ்ப்பட இயக்குனர் ஒருவர் பார்த்து நடிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். இப்போதைக்கு சம்மதித்திருக்கும் ஸ்ரேயா, தன் வீட்டாரும் ஒப்புக் கொண்டால்தான் அதை நிறைவேற்றுவாராம்.
அதுவரைக்கும் டைரக்டர் யார் என்பதும் ரகசியமாக இருந்துவிட்டு போகட்டுமே..