7 ஆம் அறிவு படத்தில் ஸ்ருதியை பார்ப்பவர்கள் அது போஸ்டராக இருந்தால் கூட சூடம் கொளுத்தி கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். அத்தனை அழகு. மிக சமீபத்தில்தான் இப்படி ஒரு அழகுடன் மிளிர்கிறார் அவர். அதற்கு காரணம், தமிழ்சினிமாவில் அவருக்கு கிடைத்து வரும் ஆஃபர்களும், அதற்கு இணையான சம்பளமும்தான்.
இத்தனை அழகான ஒருவருக்கு கேன்சர் என்றால் எப்படியிருக்கும்? இந்த
பரிதாபத்தைதான் எதிர்பார்க்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும். இந்த கேன்சருக்கான மூலிகையை கண்டுபிடிக்க கால இயந்திரத்தில் ஏறி கி.மு. வுக்கு போகிறார் சூர்யா என்று போகிறது கதை. ஸ்ருதிக்கு போய் கேன்சரா? படத்தில் கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுப்பா என்ற கமல் ரசிகர்கள் கண்ணீர் வடிப்பார்கள் அல்லவா? அது போகட்டும்.... நிஜமாகவே கவலைப்பட வேண்டிய சமாச்சாரம் இது.
ஸ்ருதியின் பார்வையில் சிறு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதாம் சமீபகாலமாக. யார் அருகில் நின்றாலும் அவர்கள் மங்கலாகதான் தெரிகிறார்கள். அதே நபர் து£ரத்தில் நிற்கும்போதுதான் பளிச்சென்று தெரிகிறாராம். நெருங்கி வந்து கை கொடுக்கும் சிலரை உத்தேசமாக யூகித்துதான் பேசுகிறாராம் ஸ்ருதி.
விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து நிற்கிறது. இந்த கண் பிரச்சனையை அவர் சரி செய்து கொண்டிருக்கலாமே என்று கவலைப்படுகிறார்கள் இவற்றையெல்லாம் நேரில் காண்பவர்கள்.
கண்ணாடி போட வேண்டியிருக்கும். அல்லது லென்ஸ் பொறுத்த வேண்டியிருக்கும் என்று கவலைப்படுகிறாரோ என்னவோ?