ரகசியங்களை வெளியிட்ட ராணுவ வீரர் தான் ஒரு பெண் என்கிறார்

விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு அமெரிக்க ராணுவ, அரசுத்துறை ரகசியங்களைத் தெரிவித்த அந்நாட்டு ராணுவ வீரர் தான் ஒரு பெண் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே நடத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ரகசிய நடவடிக்கைகள் பலவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து அவற்றை வெளிவுலகுக்கு அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு அமெரிக்க ராணுவ, அரசுத்துறை ரகசியங்களைத் தெரிவித்த அந்நாட்டு ராணுவ வீரர் பிராட்லி மேனிங்கிற்கு உளவுச் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகளுக்காக 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 25 வயதான இந்த ராணுவ வீரர், எனது உண்மையான பெயர் செல்சியா மேனிங். நான் ஒரு பெண். நான் அடிப்படையில் பெண்மைத்தன்மை உடையவன். அதை எனது குழந்தை பருவத்திலேயே உணர்ந்து கொண்டேன்.