ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரமவின் பம்பலப்பிட்டி வீட்டில் நடந்த சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட சில கோப்புகளைத் தேடுவதற்காக சிலர் மந்தனாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சில இணைய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கொள்ளையர் குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனையோர் இது கொள்ளை முயற்சியல்ல எனத் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ள நாமால் ராஜபக்ச, அறிவார்ந்த மனிதர்கள் இப்படியான வதந்திகளை நம்பமாட்டார்கள் எனக் கூறினார்.
கத்தியை விட பேனா கூர்மையானது. துரதிஷ்டவசமாக அதனை சிலர் கற்பனைக் கதைகளை எழுதவும் வதந்திகளை பரப்பவும் பயன்படுத்துகின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.