அமெரிக்காவில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்த சீக்கியரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர் அமித் சிங். அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு, மார்ச்11 ம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 14 வயது மாணவி ஒருவரை நைசாகப் பேசி, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்துவிட்டார். இது தொடர்பாக அந்த மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொலிசில் புகார் செய்து, வழக்கு பதிவானது. ஆனால் சம்பவம் நடந்த 5 நாளுக்குப்பின் அமித் சிங், இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு அமித் சிங்கை இந்தியாவில் இருந்து நாடு கடத்திக்கொண்டு செல்ல அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. அமெரிக்க பொலிசார் இந்தியா வந்து அமித் சிங்கை நியூயார்க் அழைத்துச் சென்றனர். அவர் உடனடியாக அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அமித் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
(இ.மி)