பெண் நிருபர் கற்பழிப்பு; குற்றவாளி மீது ஏற்கனவே பல வழக்குகள்

மும்பையில் பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் ஒரு சிலர் ஏற்கனவே சில பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிருபரை பலாத்காரம் செய்த 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் இரண்டு பேர் மீது ஏற்கனவே சில பலாத்கார வழக்குகள் இருப்பதாகவும், மேலும் இரண்டு பேர் திருடுதல், மிரட்டல் போன்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மும்பை காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்