
தமிழ்நாட்டிற்குள் 32 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக இலங்கையில் இருந்து தூத்துக்குடி, மணியாச்சி ரயில் நிலையத்துக்கு கிடைத்த மர்ம தொலைபேசி தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணியாச்சி ரயில் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ள நபரொருவர், தான் இலங்கையிலிருந்து பேசுவதாகவும் தமிழகத்துக்குள் மொத்தம் 32 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனர் என்று எச்சரித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
நேற்று முன்தினம் விடுக்கப்பட்ட அந்த தொலைபேசி அழைப்பு இலங்கையில் எங்கிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பில் கண்டறிவதற்காக இலங்கை பொலிஸாரின் உதவியை தமிழ்நாடு பொலிஸார் நாடியுள்ளனர்.
ஏற்கெனவே இரண்டு முறை இந்திய மத்திய உளவுத்துறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து அனாமதேய தொலைபேசி அழைப்பு மூலமும் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.