
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு தென் கொரிய பிரதமர் சன்ங் ஹொன்ங் வொன் நாளை தினம் இலங்கை செல்லவுள்ளார்.
1977ம் ஆண்டுக்கு பின்னர் தென் கொரிய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது தென் கொரிய பிரதமர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசியல் உயர் அதிகாரிகள் பலரையும் கண்டு கலந்துரையாடலில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் போது இரு நாடுகளுக்கிடையிலான உறவினை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது தென் கொரிய பிரதமர் இலங்கை - கொரிய சுற்றுச் சூழல் அழகுபடுத்தல் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தையும் பார்வையிட உள்ளார்.