விஜய் நடிப்பு கற்றுக்கொடுத்தார்! சிலிர்க்கிறார் அமலாபால்

மைனாவுக்கு பிறகு பல படங்களில் நடித்தபோதும் இரண்டாம்தட்டு நடிகை பட்டியலிலேயே இருந்தார் அமலாபால். ஆனால், இப்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதையடுத்து மேல்தட்டு ஹீரோயினி என்ற அங்கீகாரத்தைப்பெற்று விட்டார். அதனால் இதற்கடுத்தபடியாக தனுசுடன் வேலையில்லா பட்டதாரி என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார் அமலா. அதனால், தமிழில் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட அறிகுறி தென்படுவதால், அடுத்து தெலுங்கு, மலையாள படங்களை குறைத்து விட்டு தமிழில் முழுவீச்சில் இறங்கப்போகிறாராம் அமலாபால். இந்த நேரத்தில், தலைவாவில் விஜய்யுடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சிலிர்ப்புடன் சக கலைஞர்களிடம் சொல்லிக்கொண்டு வருகிறார். அதாவது, நான் ஒரு சிறிய நடிகை. ஆனபோதும், என்னிடமும் முன்னணி நடிகை போன்று மதிப்பும் மரியாதையுடனும் பழகினார் விஜய் சார். அதிலும், சில காட்சிகளில் நடித்தபோது எனக்கு எதிர்பார்த்தபடி நடிப்பு வரவில்லை. அப்போதெல்லாம் விஜய்யும் நிறைய டிப்ஸ் கொடுத்து என்னை சரியாக நடிக்க வைத்தார். இல்லையென்றால் இப்போது மற்றவர்கள் எனது நடிப்பை பெருமையாக பேசும் அளவுக்கு நான் நடித்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அமலாபால், விஜய் மாதிரி அனுபவமுள்ள பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது வளர்ந்து வரும் என்போன்றவர்களும் நடிப்பை வளர்த்துக்கொள்ள முடிகிறது. அதனால் இனி முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே முதலிடம் கொடுக்கப்போகிறேன் என்கிறா