போதைப் பொருள் கடத்தல்: 20 மாதங்களில் 90 ஆயிரம் பேர் கைதுSrilanka Tamil News
இலங்கையில் கடந்த 20 மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 90 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தியவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாள் தோறும் 150 பேர் கைது செய்யப்படுகின்றனர்.
பொலிஸாரின் சுற்றி வளைப்புக்கள் மூலம் பாரியளவில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் ஆகிய நடவடிக்கைகளில் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.