இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளை மீள இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைSrilanka Tamil News



இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் இலங்கை - இந்தியா இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 110 முகாம்களில் 68 ஆயிரத்து 58 இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் மேலும் 34 ஆயிரத்து 471 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் 5 ஆயிரத்து 628 பேர் நாடு திரும்பியுள்ளதுடன் மேலும் 2 ஆயிரத்து 400 பேர் நாடு திரும்பவுள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் நாடு திரும்பும் அகதிகளுக்கு இலவச விமானப் பயணச்சீட்டு வழங்கப்படுவதுடன் 25 ஆயிரம் ரூபா உதவி தொகையும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.