இந்திய உளவுத்துறை 4 நகரங்களில் தேடுவது யாரை? சுவாரசியமான ஒரு ரகசிய ஆட்டம்!
இந்திய மத்திய உளவுத்துறைகளில் ஒன்று (பெயர் இப்போது வேண்டாம்) டில்லி, மும்பாய், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு உதவியாக அந்தந்த மாநில பொலீஸ் துறையினரும் களத்தில் முழு வேகத்துடன் இறக்கி விடப்பட்டு உள்ளார்கள்.
இவர்கள் தேடுவது யாரை?
முகம் தெரியாத சில நபர்களை!
காரணம் என்ன?
மேலே குறிப்பிடப்பட்ட மத்திய உளவுத்துறைக்கு, கிடைத்திருக்கும் உளவுத் தகவல்களின்படி, இந்த நான்கு நகரங்களில் ஏதாவது ஒன்றில் ‘அதிமுக்கிய நபர்’ ஒருவர் குறிவைக்கப்படலாம். அந்த அதிமுக்கிய நபர் கொஞ்சம் பெரிய ஆள் என்பதும், அவருக்கு ஏதாவது நடந்து விட்டால் இந்தியா மிகப்பெரிய சிக்கலில் போய்நிற்கும் என்பதுதான் மத்திய உளவுத்துறையின் பரபரப்பு தேடலுக்குக் காரணம்.
அந்த ‘அதிமுக்கிய நபர்’ யார்?
முக்கியமான அமெரிக்க ராஜதந்திரி அல்லது, இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரங்கள் ஒன்றில் பணிபுரியும் வி.ஐ.பி. என்று கிசுகிசுக்கப்படுகிறது உளவு வட்டாரங்களில்.
மேலே தொடர்வதற்கு முன் கொஞ்சம் பின்னணி தகவல்கள்:
கடந்த மாதம் இந்திய உளவுத்துறைக்கு உளவுத் தகவல் ஒன்று கிடைத்தது. “ஆபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லீம் தீவிரவாத அமைப்பு ஒன்று, இந்திய நகரம் ஒன்றில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிடுகின்றது” என்பதே அந்த உளவுத் தகவல்.
இந்த உளவுத் தகவல், மத்திய உளவுத்துறை மேல்மட்டத்திலும், உள்துறை அமைச்சகத்திலும் விவாதிக்கப்பட்டது. அப்போது, இதற்கான சாத்தியம் பெரிதாக இல்லை என்றே மத்திய உளவுத்துறை நம்பியது. இந்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்றுக் கொண்டது.
இவர்களது நம்பிக்கைக்கு காரணம் என்ன?
ஆபிரிக்காவில் இருந்து இயங்கும் தீவிரவாத இயக்கங்கள், இதுவரை தமது தாக்குதல்களுக்காக இந்தியா வரை வந்ததில்லை. அவர்கள் தமது தாக்குதல் களமாக இந்தியாவை பயன்படுத்துவதில்லை. இதனால், இந்த உளவுத் தகவல் குறித்து அக்கறை எதுவும் எடுக்கப்பட்டவில்லை. இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை அணுகி எச்சரிக்கவும் இல்லை.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சில சம்பவங்கள் இந்திய உளவுத்துறையை நிமிர்ந்து உட்கார வைத்தது. விஷயம் இவர்கள் நினைப்பது போல லைட்டாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமல்ல என்று யோசிக்க வைத்தது.
முதலாவது சம்பவம், இரு வாரங்களுக்கு முன், ஆகஸ்ட் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை, அல்-காய்தா ஆபிரிக்க பிரிவு அமைப்புகளில் ஒன்று, தமது இணையதளம் ஒன்றில் வெளியிட்ட ஒரு அறிவித்தல். அந்த அறிவித்தலில், “எதிரிகளின் இலக்குகள் மீது தாக்குதல்கள் ஆபிரிக்க பகுதிக்கு வெளியே மிக விரைவில் ஆரம்பிக்கப்படும்” என்று கூறியிருந்தார்கள்.
அத்துடன் மொட்டையான அந்த அறிவிப்பு முடிந்தது – ஆபிரிக்காவுக்கு வெளியே எந்த நாடு என்று கூறப்பட்டிருக்கவில்லை. ‘எதிரி’ யார் என்பதோ, தாக்குதல் நடத்துவது யார் என்பதோ குறித்த விபரங்கள் ஏதுமில்லை.
அல்-காய்தா ஆபிரிக்கப் பிரிவு தாக்குதல் நடத்துகின்றது என்றால் நூற்றுக்கு தொன்ணூற்றொன்பது சதவிகிதம் அது அமெரிக்க இலக்குகளை குறி வைக்கும் தாக்குதலாகவே இருக்கும். அவர்கள் வழமையாக குறிவைப்பது, வடக்கு ஆபிரிக்க நாடுகளில், அமெரிக்க இலக்குகளைதான். விறுவிறுப்பு.காம் …அடுத்த பக்கம் வாருங்கள்