கனடாவின் வான்கூவர் தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிக்கை விடுத்துள்ள The US Pacific's ocean earthquake watch group இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும், இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 12 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது 200 km west of Port Hardy in British Columbia என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கும், உடமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த 1949ஆம் ஆண்டு 8.1 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நகரமே நிலைகுலைந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது