கோச்சடையான் சிறு முன்னோட்டம் வெளியீடு
சௌந்தர்யா, Coming Soon… என்பதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தாலும் ரசிகர்கள் படத்திற்காக அமைதியாக காத்துக்கொண்டிருந்தனர்.
கேன்ஸ் திரைப்பட விழா, சுதந்திர தினம் என ஒவ்வொரு முக்கிய தினத்திலும் கோச்சடையான் வராதா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சௌந்தர்யா அஸ்வினின் சமீபத்திய டுவீட்.
தனது டுவிட்டர் கணக்கில் சௌந்தர்யா “கோச்சடையானுக்காக காத்திருந்தது முடிவிற்கு வந்துவிட்டது. செப்டம்பர் 9-ஆம் தேதி கோச்சடையான் டீசர் ரிலீஸாகிறது. கோச்சடையான் டீசரில் அப்பாவின் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம் காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 9-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் ரசிகர்கள் விநாயகர் சதுர்த்தியோடு கோச்சடையான் டீசர் ரிலீஸையும் வெகு சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகிவருகின்றனர்.