பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது சாதகமா என்பதற்கு பதில் அளித்தார் தமன்னா. எந்த மொழியாக இருந் தாலும் பெரிய ஹீரோக்களுடனே நடிப்பது ஏன் என்று தமன்னாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது: எந்த மொழி படமாக இருந்தாலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடுவதைத்தான் விரும்புகிறேன். இப்படி செய்வதால் நிறைய நன்மைகள் இருக்கிறது.
எந்த நடிகையாக இருந்தாலும் அவருக்கு இது சாதகம் என்பதை மறுக்க முடியாது. பெரிய ஹீரோ நடிக்கும் ஒரு கமர்ஷியல் படத்தில் ஹீரோயினாக நடிப்பது ரொம்பவும் கடினமான தருணம்தான். ஏனென்றால் ஹீரோவை சூப்பர் ஹீரோவாக காட்டுவதற்கு ஏற்பவே அவரை மையப்படுத்தி நிறைய காட்சிகள் வைப்பார்கள். மிஞ்சிப்போனால் சில காமெடி காட்சி அல்லது பாடல் காட்சியில் பட ஹீரோயின் தனது திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கும்.
ஹீரோயினுக்கு எந்தளவுக்கு சிறு காட்சியாக கிடைத்தாலும் அதை பயன்படுத்தி தானும் அந்த படத்தில் இருப்பதை உறுதிபடுத்திக்காட்ட கடின உழைப்பை செலுத்த வேண்டும். அப்போதுதான் தாக்குபிடிக்க முடியும். இவ்வாறு தமன்னா கூறினார்.