பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாக நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்துக்கு அருகாமையில் கடற்படையினர் வசம் இருந்த மூன்று வீடுகள் இன்று காலை கையளிக்கப்பட்டது.
இவ்வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் வடபிராந்திய கடற்படை கட்டளை அதிகாரி அவர்கள் கலந்து கொண்டு வீட்டு உரிமையாளர்களான சு.கோபாலசிஙகம், கா.நாகசுந்தரி, த.செல்வநாயகம் ஆகியோரிடம் வீட்டின் திறப்புக்களை கையளித்தார்
இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தானியேல் றெக்சியன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி, நெடுந்தீவு இந்து மதகுருமார், நெடுந்தீவு பங்குதந்தை, நெடுந்தீவு வணபோதகர் நெடுந்தீவு கடற்படை அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராம அலுவலர்கள், வைத்திய அதிகாரி, பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர், பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் அமைந்திருக்கும் ஏனைய வீடுகளும் எதிர்வரும் காலங்களில் விரைவாக கையளிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.