ஏறும் லிப்டில் இளம்பெண் கற்பழிப்பு! காதலன் வீட்டில் காதலி தீக்குளிப்பு!

கற்பழிப்பு! புனேவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பணியாட்கள் இருவர் மருத்துவமனை லிப்டில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் போசாரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை லிப்டில், மனநலம் பாதிக்கப்பட்ட, பேசமுடியாத பெண் ஒருவர் வார்டு பணியாள‌ர் மற்றும் வாட்ச்மேனால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டார். கடந்த மாதம் 26 ஆம் தேதி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மருத்துவமனையின் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியோடு, வார்டு பணியாள் மற்றும் வாட்ச்மேன் லிப்டில் வைத்து கற்பழித்தனர். இதனால் அச்சமடைந்த அப்பெண், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி 5 நாட்கள் கழித்து தான், அவரது உறவினர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரியப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மருத்துவமனையின் வார்டு பணியாள், வாட்ச்மேன் மற்றும் லிப்ட் ஆப்பரேடர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீக்குளிப்பு! பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் கீழுரைச் சேர்ந்தவர், கந்தையா. அவருடைய மகள் சுமதி என்ற ஆறுமுகத்தம்மாள் (வயது 23), அவருக்கும், திருமலைக் கொழுந்துபுரத்தைச் சேர்ந்த சப்பாணி என்பருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் 6 மாதங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமதி, கணவரை விட்டு பிரிந்து வந்து தன்னுடைய தந்தையுடன் கீழநத்தம் கிராமத்தில் வசித்து வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இரு வீட்டாரும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் எதிர்ப்பை மீறி இருவரும் ஸ்ரீவைகுண்டம் சென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், சிறிதுநாள் அங்கு தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பினார்கள். முத்துவின் வீட்டில் சுமதியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் அவர் தாய் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் முத்துவுக்கும், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த தங்கம் என்ற பெண்ணுக்கும் அவசர, அவசரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. முத்துவுக்கு திருமணம் முடிந்த தகவலை கேள்விப்பட்ட சுமதி முத்துவின் வீட்டுமுன் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். சுமதியின் உடலைப் பார்த்த உறவினர்கள் அலறித் துடித்தனர். ஆத்திரம் அடைந்த சுமதியின் உறவினர்கள் முத்து வீட்டை அடித்து நொறுக்கினர். வீட்டு முன் நிறுத்தி இருந்த 2 கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 4 மோட்டார் சைக்கிள்களும் எரிக்கப்பட்டன. தகவல் அறிந்த போலீசார் சுமதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமதியின் சாவு குறித்து நெல்லை உதவி கலெக்டர் பெருமாள் விசாரணை நடத்தி வருகிறார்.