கரீனா கபூரின் மாமியார் அதாவது சைப் அலிகானின் தாயார் கரீனா கபூரிடம் சில அன்புக்கட்டளைகளை பிறப்பித்துள்ளாராம். அவற்றில் ஒன்று சினிமாவில் கூட வேறு நடிகர்களுக்கு முத்தம் தரக்கூடாது, படுக்கையறை காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பதுதானாம் அது. மாமியார் ஷர்மிளா தாகூர் மீது கரினாவுக்கு அளவில்லாத மரியாதை. அவருக்கு உடன்பாடில்லாத எதையும் செய்வதில்லை என்று சபதம் ஏற்றிருக்கிறாராம் கரீனா கபூர். இதனால் பாதிக்கப்பட்டது ரசிகர்களும் பாலிவுட் நடிகர்களும்தான் என்கிறார்கள். சத்யகிரஹா படத்தில் அஜய் தேவ்கானுக்கும், கரினா கபூருக்கும் நெருக்கமான காட்சி. முத்தமிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. ஆனால் முடியாது என தீர்க்கமாக சொல்லிவிட்டார் கரினா. இதற்கு முன் விஷால் பரத்வாஜின் ஓம்காரா படத்தில் இதே ஜோடி, இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்கிற அளவுக்கு நெருக்கமாக நடித்திருந்தது. 3 இடியட்ஸ் படத்தில்கூட இயக்குனர் சொன்னதும் அமீருடன் எந்த தயக்கமும் இன்றி முத்தம் பரிமாறியவர்தான் கரினா.
