டெல்லியில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஜூன் 9 ஆம் தேதி, மாலை 5 மணி அளவில் அந்த ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அருகில் இருக்கும் பகுதியில் வசிக்கும் அப்பெண் ஒரு மெட்ரோ ரயில் அந்த நிலையத்தை நெருங்கியப்போது அதன் முன் பாய்ந்தார். அந்த ரயில் சென்றப்பின், அப்பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் தப்பித்தது அந்த நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.