பிரான்ஸின் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் இலங்கையர் பலி!

பிரான்ஸின் லெமா நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் இலங்கையர் ஒருவர் உயிரி ழந்துள்ளார். மீரிகம பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் மேசன் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் என தெரியவிக்கப் படுகின்றது.

இவர் தங்கியிருந்த வீட்டின் சமயல் அறையில் தீ பரவியதாக பிரான்ஸ் தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர்.