உலககிண்ண காற்பந்து தொடருக்கு அர்ஜென்டினா தகுதி.
பிரேசிலில் நடைபெறவுள்ள காற்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலககோப்பை காற்பந்து தொடர் நடக்கிறது.
கடந்த 2010ல் தென்ஆப்ரிக்காவில் நடந்த தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அடுத்த தொடர் வரும் 2014ல் பிரேசிலில் நடக்கிறது.
இதில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும். இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதில் தென்னாபிரிக்க நாடுகளிலிருந்து மொத்தம் 4 அல்லது 5 அணிகள் தகுதி பெறும். இதற்கான தகுதிச்சுற்று போட்டியில், அர்ஜென்டினா, பராகுவே, கொலம்பியா, உருகுவே உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் நேற்று பராகுவேயில் உள்ள அசன்சியானில் நடந்த முக்கிய போட்டியில் அர்ஜென்டினா அணி, பராகுவேவை எதிர்கொண்டது.
போட்டியின் 12வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி' வாய்ப்பில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். இதற்கு பராகுவே அணியின் ஏரியல் (17) பதிலடி கொடுத்தார். தொடர்ந்து செர்ஜியோ (32) மற்றொரு கோல் அடிக்க, முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.
பின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு ஏஞ்சல் டி மரியா (50), மெஸ்சி (53) கோல் அடித்தனர். பராகுவே அணியின் சாண்டா (86) தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். போட்டியின் கடைசி நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மேக்சி (90) ஒரு கோல் அடித்து, வெற்றியை உறுதிசெய்தார்.
முடிவில், அர்ஜென்டினா அணி 5-2 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தியது.
இப்பிரிவில் பங்கேற்ற 14 போட்டியில் 8 வெற்றி, 5 சமநிலை, 1 தோல்வியை பதிவு செய்த, அர்ஜென்டினா அணி 29 புள்ளிகளுடன் உலககோப்பை கால்பந்து தொடருக்கு 16வது முறையாக தகுதி பெற்றது.