கடல்’ படத்தின் செகண்ட் பார்ட்டா ‘கயல்’? : ‘அதிர்ச்சி’யில் பிரபுசாலமன்!

இந்த ரேஞ்சில் தான் நேற்று தனது ‘கயல்’ படத்தின் பிரஸ்மீட்டில் ரிப்போர்ட்டர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பினார் டைரக்டர் பிரபுசாலமன்.

‘கும்கி’ படம் திரைக்கதையிலும், க்ளைமாக்ஸ் காட்சிகளிலும் படு சொதப்பல்ஸை கொண்டிருந்தாலும் ரம்மியமான ஒளிப்பதிவு, மற்றும் டி.இமானின் இசையினால் படம் தப்பித்துக் கொண்டது. இதனால் பிரபுசலமனின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் உடனடியாக தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் கொஞ்சம் தாமதமாக நேற்று வெளியிட்டார் பிரபுசாலமன்.

‘கயல்’ என்று அவருடைய அடுத்த படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார். ஆனால் இது அவருடைய சொந்தத் தயாரிப்பு என்பதால் சில லட்சங்களை செலவு செய்து பல கோடிகளை அள்ளும் தந்திரம் தான் இந்தப் படத்தில் தெரிந்தது.

படத்தின் ஹீரோ, ஹீரோயின் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட், கேமராமேன் என எல்லோருமே புதுமுகங்கள் தான். இந்தப்படத்தில் சம்பளம் என்று பார்த்தால் மியூசிக் டைரக்டர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, ஆர்ட் டைரக்டர் வைரபாலன், எடிட்டர் எல்.வி தாஸ் ஆகியோருக்கு மட்டும் தான். மீதி எல்லோருமே புதுமுகங்கள்.

ஆனால் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்டிடம் ரிலீஸுக்கு கொடுத்து விட்டு நேக்காக எஸ்கேப்பாகி விட திட்டமிட்டு அழகாக டீமை பார்ம் பண்ணியிருக்கிறார் பிரபுசாலமன்.

சரி இனி ‘கடல்’ விஷயத்துக்கு வருவோம்… முந்தையை இரண்டு படங்களையும் மலையும், மலைசார்ந்த இடங்களுமாக காட்டிய பிரபுசாலமன் இந்தப்படத்தில் கடலும் கடல் சார்ந்த இடமுமாக திரைக்கதையை கொண்டு செல்வார் என்று தெரிகிறது.



நேற்று நடந்த பிரஸ்மீட்டில் தனது யூனிட்டில் உள்ள எல்லோரையும் அறிமுகப்படுத்தி ஆளுக்கு ஐந்து நிமிடம் ஸ்பீச் கொடுத்த பிரபுசாலமன் படத்தின் டைட்டில் ஹீரோயினைப் பத்தி மட்டும் எதுவுமே சொல்லவில்லை.

இதை கவனித்த ஒரு ரிப்போர்ட்டர் “ படத்தின் ஹீரோயினைப் பத்தி ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லலீயே? என்று கிடுக்குப் பிடி போட்டார் “ அவங்க பேர் அனந்தி. ஆந்திராவைச் சேர்ந்த பொண்ணு” என்று மட்டும் சொல்லி விட்டு சிரித்தார். அதாவது அவரைப்பற்றி சொல்ல ஆரம்பித்தாலே படத்தின் கதை வெளியே வந்திவிடும் என்ற ஜாக்கிரதையில் பிரபுசாலமன் அப்படி பேசினார்.

ஆனால் படத்தின் படப்பிடிப்பு ஏரியாக்கள் நாகர்கோவில், கன்னியாகுமரி என இருப்பதால் பம் கண்டிப்பாக கடல் சார்ந்த கதையாகத்தான் இருக்கும் என்று நினைத்து “ அப்போ படம் ‘கடல்’ சார்ந்த கதையா..? என்று மீண்டும் ஒரு கேள்வியை கேட்டார் அந்த ரிப்போர்ட்டர்.

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காக பிரபுசாலமன் அதிர்ச்சியாகி “ப்ளீஸ் நீங்களே கதையை சொல்லிடுவீங்க போலிருக்கே…? கொஞ்சம் பொறுத்துங்கங்க.. அடுத்தடுத்து நான் உங்களுக்கு படத்தோட செய்திகளை கொடுக்கிறேன்” என்று சொல்லி தப்பித்தார்.

இதைக்கேட்ட ரிப்போர்ட்டர்கள் “கயல் ஒருவழியாக கடல் மாதிரி ஆகாமல் இருந்தா சரிதான்…” என்று கமெண்ட் அடித்தனர்.

பிரபுசாலமன் இதை கொஞ்சம் மைண்ட்ல வெச்சிக்கிட்டா சரிதான்.