
ஏற்கனவே இவர் இசையமைத்த ’3′ படத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் இவருக்கு உலகப்புகழை அளித்தது. இரண்டாவது படமான நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சலும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த வரிசையில் ‘வணக்கம் சென்னை’ படப்பாடல்களின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் ‘ஓ பெண்ணே’ பாடலின் இசை வீடியோ படப்பிடிப்பிற்காக அனிருத்தும், அவரது குழுவினரும் இந்த வாரத்தில் லண்டன் செல்ல இருக்கின்றார்கள்.
மனதை மயக்கும் இந்த இனிய பாடல் கவிஞர் நா. முத்துக்குமாரால் எழுதப்பட்டு அனிருத் மற்றும் விஷால் டட்லானியால் பாடப்பட்டுள்ளது. இளவயதினரிடம் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளிவரவிருக்கும் இந்தத் திரைப்படம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு ஒரு ஹாட்ரிக் வெற்றியைத் தரும் என்றும் திரையுலகம் தெரிவிக்கின்ற