யாழ்.கோட்டையில் நேற்றுப் பகல் வேளை பாடசாலை மாணவிகளையும் சிறுமிகளையும் அழைத்து வந்து, தமது பாலியல் தேவைக்காக பயன்படுத்திய போதைப்பொருளுக்கு அடிமையான காவாலிகள் கும்பல் ஒன்றினை அப்பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பார்த்துள்ளார். அதைத்தடுக்க அவர் முற்பட்டபோது, அவர்களுக்கு கத்தி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளது அந்தக் கும்பல்.
இதிலிருந்து ஒருவழியாக அவர் தப்பித்து யாழ் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் பண்பாடு, திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில் பாடசாலை மாணவிகளையும் சிறுமிகளையும் அழைத்து வந்து தமது பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. 15 வயது தொடக்கம் 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகளை குறிப்பிட்ட ஊடகவியலாளர் அடையாளம் கண்டுள்ளார். இச் சிறுமிகலும் போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களா, இல்லை இவர்களை மிரட்டி இக் கும்பல் பணியவைத்துள்ளதா என்பது போன்ற விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், அதனை பொலிசார் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் மேலும் அறியப்படுகிறது.