காரைதீவு, 8ஆம் பிரிவில் கடற்கரையையண்டிய வளவொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குப்பையைப் புதைப்பதற்கு குழி வெட்டியபோது மனித எச்சங்கள் வெளிப்பட்டன. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிபேரலையின் பின்னர்; கரையொதுங்கிய பெரும்பாலான சடலங்கள் பரவலாக இப்பகுதிகளில் புதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இது சுனாமியின்போது பலியான உடலாயிருக்கலாமென கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.