கலவான தெல்தோட்டை சந்தியில் ஆபாச இறுவெட்டுக்களை (CD) விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கலவான பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், நேற்றைய தினம் (01) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதாகியுள்ளார்.இதன்போது 200 ஆபாச இறுவெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபரொருவரே சம்பவத்தின் போது கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.